குஜராத்தில் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் தீவிர புயல் வாயு!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதி தீவிரமாக உருவெடுத்துள்ளது.

news18
Updated: June 12, 2019, 5:04 PM IST
குஜராத்தில் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் தீவிர புயல் வாயு!
வாயு புயல்
news18
Updated: June 12, 2019, 5:04 PM IST
வாயு புயல் நாளை அதிகாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று நண்பகல் வரை நிலை கொண்டு இருந்த "வாயு" புயல், நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், இன்று அதிகாலை அதி தீவிர சூறாவளி புயலாக மாறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கோவாவிற்கு வட மேற்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென் மேற்கே 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நகர்ந்து வருகிறது.

இந்த அதி தீவிர சூறாவளி புயல் நாளை அதிகாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 165 கிலோ மீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாயு புயல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநில அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Also see...

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...