புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்... - தமிழகத்திற்கு மழை இருக்கா...?

தமிழகத்தைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்... - தமிழகத்திற்கு மழை இருக்கா...?
கோப்புப் படம்
  • Share this:
வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...கொரோனாவால் களையிழந்த ரக்‌ஷா பந்தன்





ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்  தமிழகத்தைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading