Home /News /national /

49 டிகிரியை தாண்டி வெப்பம்... டெல்லியில் வரலாறு காணாத வெயிலால் மக்கள் கடும் அவதி

49 டிகிரியை தாண்டி வெப்பம்... டெல்லியில் வரலாறு காணாத வெயிலால் மக்கள் கடும் அவதி

டெல்லியின் மேற்குப் பகுதியில் 46 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டெல்லியின் மேற்குப் பகுதியில் 46 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டெல்லியின் மேற்குப் பகுதியில் 46 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸை எட்டியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் காலம் தொடங்கியது முதலே நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் வெயில் வாட்டிவதைக்கிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரியை தாண்டியதால் கடுமையான வெப்ப அலை நிலவியது.

இதையும் படிங்க | சத்தமில்லாமல் சரியும் பெண்கள்… 5 ஆண்டுகளில் வேலையை உதறிய 2 கோடி பேர்! ஷாக் ரிப்போர்ட்!

மேலும், வடமேற்கு டெல்லியின் முங்கேஷ்பூரில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள நஜாப்கரில் 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வடஇந்தியாவில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியின் மேற்குப் பகுதியில் 46 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹரியானாவில் குர்கானில் 48.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த நகரத்தில் உச்சபட்சமாக 1966ஆம் ஆண்டு மே மாதத்தில் 49 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்தாண்டு மே 15ஆம் தேதிதான் அதிகபட்ச வெப்பநிலை அங்கு பதிவாகியுள்ளது. மேலும், பஞ்சாபில் உள்ள முக்த்சரில் 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பண்டல்சந்த் பகுதியில் 120.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க | ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள்… பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் மொபைல் போன் கலாச்சாரம்… தீர்வு என்ன? உளவியலாளரின் கைட்லைன்ஸ் இதோ!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையான வெப்பம் குறித்து மக்களை எச்சரிக்க ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை, வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் கடுமையான வெப்பத்தில் இருந்து வரும் வாரம் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Archana R
First published:

Tags: Delhi, Summer

அடுத்த செய்தி