ஹோம் /நியூஸ் /இந்தியா /

டாக்டர் பரிந்துரையின்றி மெடிக்கல் ஷாப்புகளில் மாத்திரை கொடுப்பதை தடுக்க வேண்டும் - ஐஎம்ஏ பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

டாக்டர் பரிந்துரையின்றி மெடிக்கல் ஷாப்புகளில் மாத்திரை கொடுப்பதை தடுக்க வேண்டும் - ஐஎம்ஏ பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

டாக்டர்.ஜெயேஷ் லேலே

டாக்டர்.ஜெயேஷ் லேலே

இந்தியாவில் மருத்துவர்களுக்கு பஞ்சமில்லாத நிலையில், எம்.பி.பி.எஸ் படிக்காதவர்களை மருத்துவர்களாக உருவாக்கும் முறை அரசுக்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என இந்திய மருத்துவ சங்கத்தில் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜெயேஷ் லேலே கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவரின் பரிந்துரையின்றி மெடிக்கல் ஷாப்புகளில் மாத்திரை கொடுப்பதை தடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தில் பொதுச் செயலாளர் டாக்டர்.ஜெயேஷ் லேலே வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுச் செயலாளர் டாக்டர்.ஜெயேஷ் லேலே நியூஸ்18 - க்கு அளித்த பேட்டியில், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் என்று மத்திய அரசு உருவாக்க எடுக்கும் முயற்சிகள் அரசுக்கே ஆபத்தாக அமையும். ஒருங்கிணைந்த மருத்துவர்கள் முறைப்படி அடிப்படை மாடர்டன் மருத்துவம் படித்த எம்.பி.பி.எஸ் மருத்துவர்களாக இருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு முதல் மும்பையின் மேற்கு மலாட் பகுதியில் பொது மருத்துவராகச் செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயேஷ் லேலே, மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவர்கள் என்ற முயற்சியால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

இந்திய மருத்துவக் குழு, ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி பயின்றவர்களை அறுவைச்சிகிச்சை போன்ற மருத்துவ முதுகலை படிப்புகளில் அனுமதிப்பதை எதிர்த்து சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக டாக்டர் ஜெயேஷ் லேலே கூறுகையில், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1 லட்சம் அலோபதி மருத்துவர்கள் தேர்ச்சியடைந்து வருகின்றனர். அது போதுமானதாக இருக்கிறது. நாட்டில் மருத்துவர்கள் குறைபாடு என்ற நிலை கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மருத்துவர்கள் வேலைவாய்ப்பைத் தேடி வருகின்றனர்.

மேலும் மார்ச் மாதம் இந்திய மருத்துவ சங்கம், 1000 மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு கோரிக்கையை அரசிடம் வைத்தது. அதில் தற்போது வரை ஒருவருக்கும் கூட வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில், எந்த அடிப்படையில் மருத்துவர்கள் குறைவாகவுள்ளனர் என்று கூறுகிறார்கள். அது தவறான தகவல் ஆகும் என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைபடி ஹோமியோபதி மருத்துவர்கள், 6 மாத கால அலோபதி மருத்துவ சான்றிதழ் படிப்பு படிப்பதன் மூலம் நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் படிப்புக்குச் சேரலாம் என்ற முறை இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து பேசிய டாக்டர் ஜெயேஷ் லேலே, மருந்தகத்தில் மருத்துவர்களில் அறிவுரையின்றி அளிக்கப்படும் மருந்துகளைத் தடுத்து நிறுத்துவது குறித்துப் பேசினார். பாரசிட்டமல் மாத்திரைகள் மட்டுமின்றி ஆண்டிபயாடிக் மாத்திரைகளைக் கூட மருந்தகத்தில் உள்ளவர்கள் அல்லது தானாகவே மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். அதனை ஏன் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசு இதற்கு முறையான தீர்வை காண வேண்டும். மருந்தகத்தில் வழங்கும் அனைத்து மருந்துகளுக்கும் முறையான ரசீது வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களில் முறையான மருந்துச்சீட்டுகள் இன்றி மருந்தகத்தில் இருப்பவர்களே மக்களுக்கு மருந்து அளிக்கின்றதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தை எதிர்ப்பதில்லை. ஆனால் அனைத்தையும் ஒன்று சேர்த்து வழங்குவதைத் தான் எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

Also Read : விடிய விடிய மதுபானம்.. டிசம்பர் 31ல் ரூ.107 கோடிக்கு மது விற்பனை.. குடித்துக் கொண்டாடிய கேரள மது பிரியர்கள்!

மத்திய அரசு ஆங்கில மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவத்தை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. அது நோயாளியின் உயிரைத் தான் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவில் இதுபோன்ற பல்வேறு மருத்துவ முறைகளை இணைத்துச் செயல்படும் முறையை நடைமுறைப்படுத்த முயன்று தோல்வியடைந்துள்ளனர்.

முதலில் ஆயுர்வேதம் மற்றும் மூலிகை மருத்துவத்தினால் தீராத நோய்களும் முழுமையாகக் குணமடையும் என்று பொய்யான வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும்.

நீரிழிவு, எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் ஆயுர்வேத மருத்துவத்தால் குணமாகும் என்று நிரூபிக்கப் படாத வதந்திகளைப் பரப்பும் சாமியார்கள் அல்லது குருக்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவை மருந்துகள் மற்றும் மந்திர தீர்வு சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுவது இல்லை.

இந்த நிறுவனங்கள், கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையைக் கொடுத்து மருத்துவத்துறையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Indian medical association, MBBS