• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாங்க ரெடி, நீங்க ரெடியா?- அலோபதி விவாதம் தொடர்பாக பாபா ராம்தேவுக்கு டாக்டர்கள் சவால்

நாங்க ரெடி, நீங்க ரெடியா?- அலோபதி விவாதம் தொடர்பாக பாபா ராம்தேவுக்கு டாக்டர்கள் சவால்

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

அலோபதி மருத்துவத்தை விமர்சித்து பாபா ராம்தேவ் பேசியதையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாபா ராம்தேவ் பொதுமேடையில் விவாதத்துக்கு வருவாரா என்று அலோபதி டாக்டர்கள் சவால் விடுத்துள்ளனர்.

  • Share this:
    ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அஜய் கன்னா. இவர், யோகா குரு பாபா ராம்தேவுக்கு, 'அலோபதி' மருத்துவம் குறித்து அவதுாறான கருத்து தெரிவித்ததாக ஏற்கனவே 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.நேரடி விவாதம்இந்நிலையில் அலோபதி மருத்துவம் குறித்து, தங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டும் என, பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அலோபதி மருத்துவம் குறித்து பொறுப்பற்ற தகவல்களை வெளியிட்ட நீங்கள், அதுகுறித்து எங்களுடன் நேரடி விவாதம் நடத்த வேண்டும்.

    விவாதத்தில் பங்கேற்க, தங்களின் பதஞ்சலி யோகபீடத்தில் இருந்து பதிவு செய்த ஆயுர்வேத நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும். தாங்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து, ஐ.எம்.ஏ.,வில் பதிவு செய்த டாக்டர் குழுவினருடன், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் முன்னிலையில் நேரடியாக விவாதிக்க வேண்டும்.ஆயுர்வேத நிபுணர் குழுவில் தாங்களும், தங்கள் உதவியாளர் பாலகிருஷ்ணனும் பார்வையாளராக மட்டுமே பங்கேற்கலாம். ஏனெனில், தங்களின் தகுதியை இதுவரை பதிவு செய்யவில்லை. விவாதத்திற்கான நாள், நேரம் ஆகியவற்றை நீங்கள் முடிவு செய்யலாம்.இடத்தை நாங்கள் முடிவு செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அடுத்த 'வீடியோ'குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் மற்றும் அவற்றின் விலை வேறுபாடு குறித்து, 'சத்தியமேவ ஜெயதே' என்ற 'டிவி' நிகழ்ச்சியில் 'பாலிவுட்' நடிகர் அமிர்கானுடன், டாக்டர் சமித் ஷர்மா கலந்துரையாடிய பழைய 'வீடியோ'வை, பாபா ராம்தேவ், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 'அமிர் கானை எதிர்கொள்ள மாபியாக்களுக்கு தைரியம் உள்ளதா' என, அவர் கேள்வி எழுப்பிஉள்ளார்.

    கொரோனா சிகிச்சையில் நிறுவப்பட்ட மருத்துவமுறைகளையே, உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட முறைகளையே கடைப்பிடித்து வரும் நிலையில் பாபா ராம்தேவ் அலோபதி குறித்து அவதூறாக, தவறான கருத்துகளை பரப்பி வருவதாக ஐ.எம்.ஏ.கண்டனம் எழுப்பியது. இது தொடர்பாக போலீஸ் புகார் பதியப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்கப் போவதாகவும் அறிவித்தது.

    இந்நிலையில் பொதுவிவாதத்திற்குத் தயாரா என்று ராம்தேவுக்கு ஐ.எம்.ஏ. அழைப்பு விடுத்துள்ளது.

    வர்த்தக சண்டையே காரணம்: வி.எச்.பி:

    மருத்துவம் தொடர்பாக, தற்போது நிகழ்ந்து வரும் விவாதத்திற்கு பின், இத்துறைகளை சேர்ந்த பல்வேறு குழுக்களுக்கு இடையே பல காலமாக உள்ள வர்த்தக ரீதியிலான சண்டையே காரணமாக இருக்ககூடும்,'' என, வி.எச்.பி., அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: