ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா அச்சுறுத்தல் : மாஸ்க், தடுப்பூசி அவசியம்... இந்திய மருத்துவ சங்கம் விடுத்த அலெர்ட்

கொரோனா அச்சுறுத்தல் : மாஸ்க், தடுப்பூசி அவசியம்... இந்திய மருத்துவ சங்கம் விடுத்த அலெர்ட்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் உள்பட மூன்று தவணை தடுப்பூசிகளையும் முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவதுடன் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பரவல் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சீனாவில் மீண்டும் மையம் கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள பிஎஃப்.7 வகை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் கொரோனா தொடர்பான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில், “பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் உள்பட மூன்று தவணை தடுப்பூசிகளையும் முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவதுடன் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி..

திருமணம், அரசியல் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை பொதுமக்கள் தவிர்க்கவும், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதுபோலவே அவசரகால மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொண்டு எந்த சூழலையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இந்தியாவில் தற்போது பயப்படும்படியான சூழல்கள் இல்லை என்பதால் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் தயாராக இருப்பது நல்லது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Corona impact, Corona Vaccine