முகப்பு /செய்தி /இந்தியா / அசாம் மாநில முதலமைச்சர் வேட்பாளரா? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஞ்சன் கோகாய்

அசாம் மாநில முதலமைச்சர் வேட்பாளரா? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஞ்சன் கோகாய்

மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சன் கோகாய்.

மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சன் கோகாய்.

அசாம் மாநில பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தான் கிடையாது என்றும், தான் அரசியல்வாதி இல்லை என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :

மாநிலங்களவை உறுப்பினராக தற்போது பதவி வகிக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரஃபேல் வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் நடந்தபோது நீதிபதியாக இருந்தவர். அசாம் மாநில பாஜக முதலமைச்சர் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் தெரிவித்திருந்தார்.

அயோத்தி வழக்கில் ரஞ்சன் கோகாய் பாஜகவை திருப்திபடுத்தியதாகவும், மெல்ல அரசியலுக்குள் நுழைந்து படிப்படியாக அவர் மாநிலங்களவை நியமனத்தையும் ஏற்றதாக தருண் கோகாய் சாடினார். ரஞ்சன் கோகாய் மனித உரிமைகள் ஆணையம் போன்றவற்றில் எளிதில் தலைவராகியிருக்கலாம் என்றும் அவருக்கு அரசியல் நாட்டம் உள்ளதால்தான் மாநிலங்களவைப் பரிந்துரையை ஏற்றார் என்றும் தெரிவித்தார்.

Also read: அனைவராலும் அறியப்பட்ட, துடிப்பான தலைமை வேண்டும் - சோனியா காந்திக்கு 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடிதம்..

தருண் கோகாயின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் அரசியல்வாதி கிடையாது என்றும், முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்பது போன்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் ரஞ்சன் கோகாய் விளக்கமளித்துள்ளார்.

First published:

Tags: Assam, Ranjan Gogai