கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை... கள்ளக்காதலனுடன் தற்கொலைக்கு முயன்ற மனைவி...!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை... கள்ளக்காதலனுடன் தற்கொலைக்கு முயன்ற மனைவி...!
News18
  • News18
  • Last Updated: November 10, 2019, 3:06 PM IST
  • Share this:
கணவரைக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்து விட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைன ஜோடி, மும்பையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்குப் போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

3 குழந்தைகளுக்குத் தாயான லிஜியை அடைய நினைத்த வாசிம், அவரது கணவரை குடிகாரராக்கி கொலையும் செய்து பண்ணை வீட்டில் புதைத்துள்ளார். வாசிமும் லிஜியும் மும்பையில் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறையில் உள்ள மஷ்ரூம் ஹட் என்ற பண்ணை வீட்டில் லிஜி என்பவர் பணி செய்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் தனது கணவரைக் காணவில்லை என போலீசில் புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்தனர்.


லிஜி தனியாகச் செல்லாமல், தனது 2 வயது பெண் குழந்தையுடன் காணாமல் போனார். அதேநாளில் பண்ணை வீட்டு மேலாளர் வாசிமையும் காணவில்லை.

இருவரும் சேர்ந்து நாடகமாடுவதை உறுதிப்படுத்திய போலீசார், அவர்களின் மறைவிடத்தை கண்டுபிடித்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

பயந்துபோன வாசிம், போலீசாருக்கு வாட்ஸாப்பில் ஒரு வீடியோவை அனுப்பினார். அதில், லிஜியின் கணவர் ரிஜோசை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.ரிஜோசை பண்ணை வீட்டில் புதைத்திருப்பதாகவும் இதில் தனக்கு மட்டுமே தொடர்பிருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் பண்ணை வீட்டில் மோப்ப நாய் ஜென்னி மூலம் சோதனையிட்டனர்.

பண்ணையில் சுற்றி வந்த நாய் ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது 6 அடி ஆழத்தில் ரிஜோசின் சடலம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரிஜோஸ் கொலையின் பகீர் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரிஜோஸ் - லிஜி தம்பதியினர் 3 குழந்தைகளுடன், அங்குள்ள மஷ்ரூம் ஹட் பண்ணையில் வேலை செய்து வந்தனர்

பண்ணையில் உள்ள விலங்குகளை ரிஜோஸ் கவனித்துக் கொள்ள லிஜி மற்ற வேலைகளைப் பார்த்து வந்தார். இரிஞ்ஞாலக்குடாவைச் சேர்ந்த 31 வயதான வாசிம் பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்

இந்த நிலையில், லிஜி மீது வாசிமுக்கு ஆசை ஏற்பட்டது; அவரை அடைய நினைத்த வாசிம், தனித் திட்டம் தீட்டினார்எப்போதாவது குடிக்கும் ரிஜோசுக்கு அடிக்கடி பணம் கொடுத்து முழுக் குடிகாரனாக மாற்றினார்

அதையே காரணம் காட்டி லிஜியிடம் ஆறுதலாகப் பேசி அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார். நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது

மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரிந்து கொண்ட ரிஜோஸ், அவர்களது அட்டூழிய செயல்களை கண்டித்துள்ளார். இதையடுத்து ரிஜோசை தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என வாசிமும் லிஜியும் திட்டம் தீட்டினர்

அதன்படி கடந்த அக்டோபர் 31ம் தேதி ரிஜோசுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து வாசிம் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில், தலைமறைவான லிஜி மற்றும் அவரது கள்ளக்காதலன் வாசிம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் மும்பைக்கு சென்று பதுங்கியுள்ளனர்,

போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த கள்ளக்காதல் ஜோடி, 2 வயது குழந்தையுடன் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்,

இதில் குழந்தை உயிரிழந்து விட்டது,. லிஜியும், வாசிமும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக போலசீார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்ய அனுமதித்த இளம்பெண், தனது கள்ளக்காதலனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்