நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் கூலிப்படை ஏவி தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். நொய்டாவை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் இளைஞருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 35 வயதான அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டாவை விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார்.
சமீபத்தில் அந்த நபருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்கு முன்பு வரை இந்தப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். திருமணத்துக்கு பின் இவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் அந்தப்பெண்ணின் செல்போன் எண்ணையும் ப்ளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை தீர்த்து கட்டுவது என முடிவு செய்து கூலிப்படையை ஏவியுள்ளார். இந்த தகவல் உளவாளிகள் மூலம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.
நொய்டா தேசிய நெடுச்சாலையின் மாநில எல்லையில் அந்தப்பெண் கூலிப்படைக்காக காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தததில் இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் கூலிப்படைக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை கைப்பற்றியுள்ளனர். அவரது பையில் கூலிப்படையினருக்கு அடையாளம் காட்டுவதற்காக கள்ளக்காதலனின் போட்டோவும் வைத்துள்ளார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், “கள்ளக்காதலனை கொலை செய்ய கூலிப்படையை தயார் செய்ததை ஒப்புக்கொண்டார். கூலிப்படையினருக்கு இதற்கு கூலியாக ரூபாய் 4 லட்சம் பேசியதாகவும் அட்வான்ஸ் தொகையான ரூபாய் 30000 கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 5000 மதிப்பிலான இரண்டு நாட்டுத்துப்பாக்கியையும் வாங்கியதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார். மேலும் கூலிப்படையினருடன் ஜான்பூர் சென்று அவர்களுக்கு கள்ளக்காதலனின் வீட்டினை அடையாளம் காட்ட தயாராக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்தப்பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.