Home /News /national /

3 ஆண்களுடன் தகாத உறவு.. தட்டிக்கேட்ட கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்

3 ஆண்களுடன் தகாத உறவு.. தட்டிக்கேட்ட கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குண்டூரில் வேறு சில ஆண்களுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்த கள்ளக்காதலனை பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டூர் பகுதியில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமல்லேஸ்வரி. திருமணமான சில நாள்களிலே நாகமல்லேஸ்வரியின் கணவர் மரணமடைய உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான பாஷா வீட்டைவிட்டு வெளியேறி குண்டூர் பகுதிக்கு வந்துள்ளார். லாக்டவுன் சமயம் என்பதால் வேலை தேடி அழைந்துள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஓட்டலில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் பாஷாவுக்கு நாகமல்லேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

    Also Read:  கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார்.. வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸார்

    ஒருகட்டத்தில் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். ஒரே வீட்டில் இருவரும் தங்கினர். அதன்பின்னர்தான் நாக மல்லேஸ்வரியும் உண்மை முகம் பாஷாவுக்கு தெரியவந்தது. அந்தப்பெண் மேலும் இருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதன்காரணமாக பாஷா அந்தப்பெண்ணை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். மேலும் அந்த நபர்கள் உடனான தொடர்பு குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார். பாஷாவின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த நாக மல்லேஸ்வரி உல்லாச வாழ்க்கைக்கு இவர் இடையூராக இருப்பதாக எண்ணியுள்ளார்.

    இதனையடுத்து பாஷாவை ஒழித்துக்கட்ட விரும்பினார். தனது எண்ணத்தை மற்ற கள்ள காதலர்களான அமரையா மற்றும் சுப்பாராவ் ஆகியோரிடம் கூறியுள்ளார். மேலும் அவர்களின் உதவியை நாடியுள்ளார். மூவரும் சேர்ந்து பாஷா-வை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர். குடிபோதையில் பாஷாவை தீர்த்துகட்ட முடிவு செய்து கடந்த 3-ம் தேதி ரயில் நிலையத்துக்கு பின்னால் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு மது குடிக்க அழைத்து சென்றுள்ளனர். பாஷா-வுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளனர்.

    Also Read: காதலி பேசாததால் காதலன் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    பாஷாவுக்கு போதை அளவுக்கு அதிகமானது அவரது கழுத்தை நெறித்து இருவரும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பாஷா இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகமல்லேஸ்வரி தலைமறைவானதையடுத்து போலீஸாருக்கு சந்தேகம் வழுந்தது. அவரைக் கைது செய்த போலீஸார் தங்களது பாணியில் விசாரிக்க அவர்  உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Extramarital affair, Illegal affair, Illegal relationship, Murder, Woman

    அடுத்த செய்தி