ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமரை கண்டு வியக்கிறேன்.. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா நெகிழ்ச்சி!

பிரதமரை கண்டு வியக்கிறேன்.. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா நெகிழ்ச்சி!

இளையராஜா - பிரதமர் மோடி

இளையராஜா - பிரதமர் மோடி

kasi tamil sangamam : காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பிரதமரை பார்த்து வியந்து வியந்து மகிழ்வதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பிரதமரை பார்த்து வியந்து வியந்து மகிழ்வதாக தெரிவித்தார்.

    நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா  திரைப்பட பாடலான ஜனனி, ஜனனி பாடலை பாடிய படி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து ஓம் சிவோஹம் என்ற பாடலை பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க செய்தார். தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய உணர்வுகளை முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை என கூறினார்.

    மேலும், காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என இங்கு விளக்கி விளக்கி அனைவரும் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தார். தொடர்ந்து பாரதியார் இங்கு 2 வருடம் படித்திருக்கிறார் என கூறிய அவர், "கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்" பாரதியாரின் பாடலை சுட்டி காட்டி காசியில் புகழை பற்றி பேசினார்.

    அப்படிப்பட்ட இந்த புண்ணிய பூமியான காசியில் தமிழ் சங்கமத்தை நடத்த எப்படி பிரதமருக்கு யோசனை வந்தது என்பதை வியந்து வியந்து மகிழ்கிறேன். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் புகழும் கொடுக்க வாழ்த்தி விடைபெறுகிறேன் என கூறி சென்றார்.

    Published by:Anupriyam K
    First published: