இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாலக்காடு தேசிய இணையதள வடிவமைப்பு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. டிசைனர்ஸ் மற்றும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறி இருக்கும் ஐஐடி பாலக்காடு, போட்டியின்படி இன்ஸ்டிடியூட்டின் வெப்சைட்டிற்கு என்று பிரத்யேகமாக ஒரு டிசைனையும், டிபார்ட்மென்ட்டின் வெப்சைட்டிற்கு என்று ஒரு டிசைனையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிசைனை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூலை 24 மாலை 5 மணி ஆகும். இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவர்கள், ஃபிரெஷ்ஷர்கள் மற்றும் டிசைனர்கள் தகுதியுடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் சப்மிஷனுக்கு அனுமதி உண்டு, ஆனால் ஒரு குரூப்பில் அதிகபட்சம் 3 பேர் மட்டுமே இருக்கலாம். என்ட்ரிஸ்களை design@iitpkd.ac.in என்ற இமெயில் ஐடி-க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வெப் டிசைன் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெரும் நபருக்கு ரூ.30,000 ரொக்கம் வழங்கப்படும். இரண்டாம் பரிசு இருவருக்கு வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறும் இருவருக்கு தலா ரூ.15,000 வழங்கப்படும். தவிர ஒரு சில ஆறுதல் பரிசுகளும் உண்டு. போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு டிசைனுக்கும் சர்ட்டிபிகேட் வழங்கப்படும். போட்டியின் முடிவுகள் குறித்து பாலக்காடு ஐஐடி நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
போட்டியாளர்கள் டிசைன் செய்யும் வெப்சைட்கள் நல்ல லுக், நல்ல கலர் காம்பினேஷன், சிறப்பான பேக்ரவுண்ட்ஸ் மற்றும் லேஅவுட் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக லே அவுட் மற்றும் கலர் பேலட் ஆகியவை நிறுவனத்தின் லோகோவின் கலர்ஸ் மற்றும் கேரக்டர்ஸுடன் நன்றாக ஒத்து போக வேண்டும். அதே போல வெப்சைட்டின் இன்டர்ஃபேஸ் மாடர்னாக மற்றும் யூஸர்-ஃபிரெண்ட்லியாக, எளிதாக பயன்படுத்தும் வகையிலான அம்சங்களுடன் இருக்க வேண்டும் என IIT Palakkad அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது.
also read : உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கும் பெண்ணை இப்படி மட்டும் காப்பாத்துலன்னா அவ்ளோ தான்..
டிசைன்களை உருவாக்கும் போது சேர்க்கப்பட வேண்டிய வழிமுறைகளை பற்றி கூறியுள்ள ஐஐடி பாலக்காடு, கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ஸ், டேப்லெட்ஸ் மற்றும் மொபைல் போன்களுக்கு ஏற்றதாக டிசைன் இருக்க வேண்டும். இணையதளத்தின்படி, 'what’s new', 'latest updates', 'recruitment', 'student activities' போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். மேலும் ஹோம்பேஜில் கேலரி, ஈவன்ட்ஸ், அவார்ட்ஸ், நியூஸ் பிளாக்ஸ் மற்றும் தனி மெனுக்கள் இருக்க வேண்டும்.
also read : கேரளாவில் தொடரும் பதற்றம்... பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..
பிரசுரங்கள், விருதுகள், ஆராய்ச்சிப் பகுதிகள் போன்றவற்றை கொண்ட faculty profiles-ஐ உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் IIT Palakkad கூறியுள்ளது. டிசைனை சமர்ப்பிக்கும் போது காப்பி ரைட்ஸ் சிக்கல் ஏற்படுத்த கூடிய எந்தவொரு கன்டென்ட் அல்லது எந்த லோகோவை பயன்படுத்தவில்லை என்பதை போட்டியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்லா கன்டென்ட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும், அல்லது அதைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்க வேண்டும், அனுமதியின்றி நபர்களின் போட்டோக்களை போஸ்ட் செய்ய வேண்டாம். இந்த சமர்ப்பிப்பு நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் ஐஐடி பாலக்காடு வெப்சைட்டில் உள்ள கன்டென்ட்களை பயன்படுத்தலாம் என்று போட்டியாளர்களுக்கு இன்ஸ்டிட்டியூட் அறிவுறுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.