Home /News /national /

’எல்லோரும் 2 டோஸ் போட்டவர்கள்’ ஐஐடி ஹைதராபாத் மாணவர்களை துரத்தும் கொரோனா!

’எல்லோரும் 2 டோஸ் போட்டவர்கள்’ ஐஐடி ஹைதராபாத் மாணவர்களை துரத்தும் கொரோனா!

கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டு முறை தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே வளாகத்திற்கு அழைக்கப்பட்டதாக ஜனவரி 13ஆம் தேதி அன்று ஐஐடி ஹைதராபாத் வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டு முறை தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே வளாகத்திற்கு அழைக்கப்பட்டதாக ஜனவரி 13ஆம் தேதி அன்று ஐஐடி ஹைதராபாத் வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டு முறை தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே வளாகத்திற்கு அழைக்கப்பட்டதாக ஜனவரி 13ஆம் தேதி அன்று ஐஐடி ஹைதராபாத் வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 14ஆம் தேதி தரவுகளின்படி, சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உருதியான ஹைதராபாத் ஐஐடி (IITH)-இன் மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் குணமடைந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் அமைந்துள்ள வளாகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120 மாணவர்கள் மற்றும் வளாக ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மாணவர்கள் மட்டுமே வளாகத்திற்கு அழைக்கப்பட்டதாக ஜனவரி 13ஆம் தேதி அன்று ஐஐடி ஹைதராபாத் வளாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘தற்போது 112 மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவியுள்ளது.

அவர்கள் அனைவரும் தனித்தனியான அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பதிவாகிய அனைத்து பாதிப்புகளும் லேசான அல்லது அறிகுறியற்றவை என்பதால் 4 முதல் 5 நாட்களுக்குள் குணமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன’ என்று நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | மதுகுடிக்க பணம் தராத 7 மாத கர்ப்பிணி மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர கணவன்

மேலும், ஐஐடி ஹைதராபாத் வளாகத்தில் தனிமைப்படுத்த தற்போது 211 அறைகள் உள்ளன, இதற்கிடையே இந்த எண்ணிக்கை தேவையின் அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், இவ்வளாகத்தில் அனைத்து நேரடி செயல்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டு செமஸ்டர் தேர்வுகளும் முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்படாத சுமார் 600 மாணவர்கள் ஏற்கனவே வளாகத்தை காலி செய்துவிட்டனர். காலியாக உள்ள விடுதிகளை தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நன்கு தகுதி வாய்ந்த 6 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்கள் ஐஐடி ஹைதராபாத் மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் அனைத்து நாட்களிலும் சேவை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக பிரத்தியேகமாக நான்கு கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கான உணவு மற்றும் மருந்துகள் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி கண்காணிப்பாளர்களால் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐஐடி ஹைதராபாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published by:Archana R
First published:

Tags: Covid-19, Hyderabad, Telangana

அடுத்த செய்தி