ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவர் சங்கம் உட்பட 5,789 அமைப்புகள், வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகள் பெறுவதற்கான அனுமதியை நேற்றுடன் இழந்துள்ளன.
இதில் நேரு நினைவு அருங்காட்சியகம், லால் பகதூர் சாஸ்த்ரி நினைவு அறக்கட்டளை உள்ளிட்ட சுமார் 600 அமைப்புகள் டெல்லியை மையமாக கொண்டு செயல்படுபவை. வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான அனுமதியை இந்த அமைப்புகள் புதுப்பிக்காத காரணத்தால், அவை காலாவதியானதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியக் காசநோய் சங்கம், இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் இந்திய இஸ்லாமிய கலாசார மையம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கான விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் 179 அமைப்புகள், அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also read:
Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்ட விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் FCRA எனப்படும் (Foreign Contribution Regulation) சட்டத்தின் கீழ் அன்னை தெரசா மிஷனரியின் விண்ணப்பம் கடந்த 25-ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் 13,000 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது FCRA உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தன. இவற்றில் 179 அமைப்புகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
எனினும், உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்காத காரணத்தால், 5,789 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கான தகுதியை இழந்துள்ளன.
இவ்வாறு உரிமம் ரத்தான நிறுவனங்களில் பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் டெல்லி ஐ.ஐ.டி., ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய வாழிட மையம், லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி மற்றும் டெல்லி என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை முக்கியமானவை ஆகும்.
Also read: வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.