Home /News /national /

கோவிட்-19 பாதித்த ஆண்களுக்கு இனவிருத்தி பாதிப்புக்கு வாய்ப்பு - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவிட்-19 பாதித்த ஆண்களுக்கு இனவிருத்தி பாதிப்புக்கு வாய்ப்பு - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு இன விருத்தி சார்ந்த புரதக் குறைபாடு நீண்ட கால விளைவாக ஏற்படலாம் என ஐஐடி பாம்பே நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு இன விருத்தி சார்ந்த புரதக் குறைபாடு நீண்ட கால விளைவாக ஏற்படலாம் என ஐஐடி பாம்பே நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் நீண்ட கால பக்க விளைவுகள் குறித்து ஐஐடி பாம்பேவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், கோவிட்-19 பாதிப்புக்குள்ளான ஆண்களின் ஆண்மை திறன் குறித்த ஆய்வின் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏசிஎஸ் ஒமேகா என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளில் வெளிவந்துள்ளன.

    அதில் லேசான கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் விந்தணுவில் பாதிப்பு ஏற்பட்டு இனவிருத்தி செயல்பாட்டில் சிக்கலை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்புக்குள்ளான ஆண்களின் விந்தணுக்களில் உள்ள புரதத்தின் அளவை இந்த ஆய்வில் பரிசோதித்தனர். 20-45 வயதைச் சேர்ந்த ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியமான ஆண்கள் 10 பேரிடமும், கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்ட 17 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கோவிட்-19 பாதிப்புக்குள்ளான ஆண்களிடம் விந்தணு அளவு குறைந்தும் அவர்களின் விந்தணு வடிவத்தில் மாற்றமும் இருந்தது ஆய்வில் வெளியாகியுள்ளது. இவர்கள் யாருக்கும் கோவிட்-19 பாதிப்புக்கு முன் இதுபோன்ற குறைபாடுகள் இருந்ததில்லை.

    மேலும், பாதிப்பிலிருந்து மீண்ட ஆண்களின் விந்தணுவின் புரதத்தை க்ரோமேடோகிராபி பரிசோதனை மேற்கொண்ட போது, 27 புரதங்கள் இயல்புக்கு அதிகமாகவும், 21 புரதங்கள் இயல்புக்குக் குறைவாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான புரதம் இன விருத்தியில் முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீமனோகேலின் 1 மற்றும் ப்ரோசாபோசின் ஆகிய இரு புரதங்கள் ஆரோக்கியமான ஆண்களிடம் இருப்பதை விட கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம் பாதி அளவுக்கு கீழ் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    Also read... ஆந்திர உள்துறை அமைச்சராக தலித் பெண் - 2024 தேர்தலை கணக்கில்வைத்து காய் நகர்த்தும் ஜெகன்

    பொதுவாக கோவிட்-19 பாதிப்பு சுவாச பகுதியில்  அதிகம் காணப்படும் என்ற போதிலும், உடலின் மற்ற பகுதிகள், திசுக்களிடமும் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துவது பல ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இன விருத்தி தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    இருப்பினும் சிறிய அளவிலான இந்த ஆய்வை வைத்து உறுதியாக கருத்துக்களை நிறுவ முடியாது எனவும் இது தொடர்பாக மேலும் பெரிய அளவில் பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி