முகப்பு /செய்தி /இந்தியா / மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலைக்கு இதுதான் காரணம் - மாணவர் அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலைக்கு இதுதான் காரணம் - மாணவர் அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

காட்சிப் படம்

காட்சிப் படம்

IIT Student Suicide: இது, தனிமனித விவகாரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிறுவனப்  படுகொலை என குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை ஐஐடி நிறுவனத்தில் படித்து வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை  அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சாதி ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக மாணவர் தற்கொலை  கொண்டதாக மும்பை ஐஐடி-யின் மாணவர்கள் அமைப்பான பெரியார்-அம்பேத்கார் படிப்பு வட்டம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பெரியார்-அம்பேத்கார் படிப்பு வட்டம் தனது ட்விட்டர் பதிவில்,  " 18 வயது  நிரம்பிய மாணவர் மரணத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர் தர்ஷன் சோலன்கி, மும்பை ஐஐடியில் பிடெக் படிப்பை மூன்று மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளன. இது, தனிமனித விவகாரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிறுவனப்  படுகொலை. 

தலித்-பகுஜன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வளாகத்தை உருவாக்கிட நிர்வாகம் எந்த ஏற்பாடையும் செய்யவில்லை.  இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் முதலாமாண்டு மாணவர்கள் மிகப்பெரிய மனஉளைச்சலை எதிர்கொண்டு வருகின்றனர். அலுவலர்/  பேராசிரியர்      பணியிடங்களில் அடித்தட்டு சமூகத்தைச் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து  மூத்த மும்பை காவல்துறை அதிகாரி, "  தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிங்கள் உள்ளன. உண்மை அறிய மற்ற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

First published:

Tags: Caste, India