புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், அதனை பாடும்படி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டு விழாவில் பாட வைத்தார்.
புதுச்சேரி ஜிப்மர் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜிப்மர் சர்வதேச பொதுச்சுகாதார பள்ளியை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் விழா இன்று நடந்தது.
விழாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் விழா தொடக்கத்தில் தன்வந்தரி ஸ்லோகம் சமஸ்கிருதத்தில் பாடப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து பாட துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியும் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததை சுட்டிக்காட்டினார். பின்னர் விழா முடிவடையும் நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்க வைத்தார். இதன்பின் நன்றி தெரிவித்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழா முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஜிப்மரில் தமிழ் மக்களுக்கு தான் சேவை செய்கிறார்கள். அதுபோல் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எல்லோர் விருப்பம். இனி தமிழ்தாயை ஒலிக்காமால் தமிழ்நாட்டில் எந்த நிறுவனமும் இனி இருக்காது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamilisai Soundararajan