வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டைப் பயன்படுத்தலாம்!

”ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம்” விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.  இந்த திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான மின் விநியோகத்தை வேகப்படுத்த முடியும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 5, 2019, 6:30 PM IST
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டைப் பயன்படுத்தலாம்!
பான் கார்டு இல்லைனா ஆதார் கார்டு
Web Desk | news18
Updated: July 5, 2019, 6:30 PM IST
"2022-ம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்.பி.ஜி கேஸ் இணைப்பு பெற்று இருக்கும்” என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்,  "வருமான வரி கணக்கு உட்பட அனைத்துக்கும் பான் கார்டு இல்லையென்றால் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படும். மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.

நாடு முழுவதும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆற்றுவழி மூலமாகவும் சரக்கு போக்குவரத்து மேம்படுத்தப்படும். நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதன் மூலம் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

அடுத்த 12 ஆண்டுகள் வரை தனியார் பங்களிப்புடன் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான மின் விநியோகத்தை வேகப்படுத்த முடியும்.

ஆண்டுக்கு 1.5 கோடிக்கு கீழ் வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்கள் 3 கோடி பேருக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்கும் முறையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் 180 நாட்கள் கழித்து ஆதார் கார்டு வழங்கும் நடைமுறையை மாற்றி உடனே ஆதார் வழங்க வழிவகை செய்யப்படும்.

2022-ம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்பு பெற்று இருக்கும்” என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

Also watch: வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநாநூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா 
First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...