சாகவேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்? - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

 • Share this:
  சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டிசம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. 20-க்கும் மேற்பட்டவர்கள் சுடப்பட்டு உயிரிழந்தனர். நாங்கள் ஒரு தோட்டாவைக்கூட பயன்படுத்தவில்லை என காவல்துறை தரப்பு மறுத்துவிட்டது.

  சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ”காவல்துறையினரின் குண்டுகளுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. கலவரம் செய்தவர்களின் துப்பாக்கிக் குண்டுகளால்தான் பலியானார்கள். சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? மக்களைச் சுட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவர் இறங்கினால் அவர் உயிரிழப்பார். ஆசாதி கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப்படுகின்றன. காந்தியின் குறிக்கோளுக்கு உழைக்க வேண்டுமா? அல்லது ஜின்னாவின் குறிக்கோளுக்காக உழைக்கவேண்டுமா? காவல்துறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. நான் ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்பவன். ஜனநாயகத்துக்குப் பின்னால் ஒளிந்து யாராவது ஜனநாயகத்தைத் துண்டாடினால், அவர்களின் யுக்தியைப் போலவே அவர்களுக்கு பதிலடி தருவோம்” என்று பேசியிருப்பது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

  Also See...
  Published by:Gunavathy
  First published: