முகப்பு /செய்தி /இந்தியா / “உளவுத்துறை தோல்வியில்லை என்றால் பிறகென்ன?” : மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி

“உளவுத்துறை தோல்வியில்லை என்றால் பிறகென்ன?” : மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

சத்தீஸ்கரில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்புக்கு காரணம் உளவுத்துறை தோல்வி இல்லை என்றால் பிறகென்ன என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Last Updated :

சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாவோயிஸ்ட் எதிர்ப்பு தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் திட்டமிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் நிறைந்த பிஜாபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள தெற்கு பஸ்தார் காடுகளுக்குள் தேடுதல் வேட்டஒயை பாதுகாப்புப் படையினர் துவங்கினர். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உயரிய பிரிவான CoBRA எனும் கமாண்டோ பட்டாலியன், மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG), சிறப்பு அதிரடிப்படை (STF) போன்ற முக்கிய பிரிவு படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தரீம், உசூர், பமேத் பகுதிகள் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இலக்காக கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

காட்டுப்பகுதியில் முன்னேறிச் சென்ற பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் மாவோயிஸ்ட்களை எதிர்கொண்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படை தரப்பில் 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 வீரர்கள் பலியானது உளவுத்துறையின் தோல்வியா என்ற கேள்விக்கு பதிலளித்த சிஆர்பிஎப் இயக்குனர் குல்திப் சிங் இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வி என்பது கிடையாது. மாவோயிஸ்ட் தரப்பில் 30 வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்திருதார்.

சிஆர்பிஎப் இயக்குனர் குல்திப் சிங்கின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, உளவுத்துறை தோல்வி இல்லை என்றால், 1: 1 இறப்பு விகிதம் என்பது மோசமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் திறமையற்ற முறையில் செயல்படுத்தப்பட்ட செயலாகும்.

எங்கள் வீரர்கள் குண்டுகளுக்கு இரையாக வேண்டியதில்லை. 21ம் நூற்றாண்டில் எந்த ஒரு இந்திய வீரரும் கவச உடை இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது. கவச உடைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Congress, Maoist, Rahul gandhi