Home /News /national /

மோடி பிரதமராகும்போது நிதிஷ் குமாரால் ஏன் முடியாது? - தேஜஸ்வி யாதவ்

மோடி பிரதமராகும்போது நிதிஷ் குமாரால் ஏன் முடியாது? - தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், மோடி.

நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், மோடி.

Bihar: பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறியதைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கான போட்டியாளர்கள் எண்ணிக்கை எதிர்க்கட்சியில் அதிகரித்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 2024-ம் ஆண்டுக்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வகுக்கவேண்டும் எனவும் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் யாதவ் தகுதியானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைத்து முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தள்ளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்தார். அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க, துணை முதலமைச்சர் பதவி தேஜஸ்வி யாதவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தேஜஸ்வி பேட்டியளித்தார். அப்போது 2024-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் தகுதியானவரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு “நரேந்திர மோடியால் பிரதமராக முடியும்போது, நிதிஷ்குமார் அவர்களால் ஏன் ஆக முடியாது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும் நிதிஷ் குமார் யாதவிற்கு அனுபவம் உண்டு என்றும், மாநிலங்களவையைத் தவிர அனைத்து அவைகளிலும் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்றும், மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் எனவும் தேஜஸ்வி பதிலளித்தார்.

    அது மட்டுமில்லாமல் “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து திட்டங்களை வகுக்கவேண்டும். நாம் மிகத் தாமதமாகச் செல்கிறோம்.” எனவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Bihar, Modi, Nitish Kumar

    அடுத்த செய்தி