Home /News /national /

Omicron| ஓமைக்ரான் இந்தியாவில் பரவினால் தினசரி 14-15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்- வி.கே.பால் எச்சரிக்கை

Omicron| ஓமைக்ரான் இந்தியாவில் பரவினால் தினசரி 14-15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்- வி.கே.பால் எச்சரிக்கை

வி.கே. பால்.

வி.கே. பால்.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் மக்கள் தொகையில் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

    பிரிட்டனில் 94,000 பேருக்கு புதிதாக ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்ததையடுத்து இந்தியாவில் இது போன்று ஓமைக்ரான் பரவினால் தினமும் சுமார் 14-15 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.

    இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் 113 ஓமைக்ரான் நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேருக்கு வெள்ளிக்கிழமையான நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.பால், ஐரோப்பாவில் ஓமைக்ரான் பரவும் வேகத்தை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் நாளொன்றுக்கு 14-15 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இப்போது பண்டிகைக் காலம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை என்று வரிசையாக வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார். “பிரிட்டனில் பரவி வரும் வேகத்தையும் எண்ணிக்கையையும் பார்க்கும் போது இந்தியாவில் பரவினால் இங்கு இருக்கும் மக்கள் தொகை நெருக்கத்துக்கு 14-15 லட்சம் பேர் வரை தினசரி பாதிக்கப்படுவார்கள்.

    இது இன்னமும் கூட வளர்ந்து வரும் எதிர்பாரா சூழல் என்ற மட்டத்தில்தான் இருக்கிறது. அரசு நிலைமைகளை கண்காணித்து வருகிறது. ஓமைக்ரான் மிதமான அளவில்தான் தொற்றி வருகிறது.

    ஒவ்வொரு கொரோனா பரிசோதனை சாம்பிளையும் ஜெனோம் வரிசைப்பாடு செய்வது கடினம். அது கண்காணிப்பு, பெருந்தொற்று பரவல் எச்சரிக்கை உத்தியாகும், அதை வைத்து நோய்க்கணிப்பு செய்ய முடியாது. ஆனால் முறையான சாம்பிள் டெஸ்ட்கள் உண்டும் என்பதை உறுதி அளிக்கிறோம். பொதுவெளியில் வரும் தகவல்களை நீங்கள் அறிவீர்கள் ஓமைக்ரான் நிலவரம் பிரிட்டனிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருவதை அறிவீர்கள்.

    இதையும் படிங்க: ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் - தடுப்பூசி தேவை

    பிரிட்டனில் வியாழனன்று 80,000 பேருக்கு ஓமைக்ரான் தொற்றியிருக்கிறது, அங்கு வாக்சின் முறை எப்படி என்று நாம் அறிவோம், முழு வாக்சின் போட்டுக் கொண்டவர்களையும் ஓமைக்ரான் விட்டு வைக்கவில்லை. பிரான்சில் 80% பகுதியளவு தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் 65,000 பேருக்கு ஓமைக்ரான் தொற்றியுள்ளது.

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000த்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஓமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்” என்றார் டாக்டர் வி.கே.பால்.

    இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் மக்கள் தொகையில் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி