• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒரே மூதாதையர்கள்தான் என்றால் முஸ்லிம்களை ஏன் இப்படி நடத்த வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.க்கு மாயாவதி கேள்வி

ஒரே மூதாதையர்கள்தான் என்றால் முஸ்லிம்களை ஏன் இப்படி நடத்த வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.க்கு மாயாவதி கேள்வி

மாயாவதி,

மாயாவதி,

இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரே மூதாதையர்கள் தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதையடுத்து மாயாவதி அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    புனேயில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசும்போது, “இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள்தான் என்று பேசினார், இதற்கு பதில் கேள்வியாகத்தான் மாயாவதி பின் ஏன் முஸ்லிம்கள் மீது ஆர்.எஸ்.எஸ். , பாஜக விரோதம் பாராட்டுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

    மோகன் பகவத் பேசியது: “முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அடிப்படைவாதத்துக்கு எதிராக, வலிமையாக ஒன்றுதிரள வேண்டும். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்தின் மீதும் விரோத மனப்பான்மையுடனும் இல்லை.இந்து என்ற வார்த்தை தாய் மண்ணுக்கும், மூதாதையர்களுக்கும், இந்தியக் கலாச்சாரத்துக்கும் சமமானது. எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். அவர்கள் மத்ததால், மொழியால், இனத்தால் வேறுபட்டாலும் அவர்கள் இந்துதான்.

    இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே மூதாதையர்களைக் கொண்டவர்கள்தான். அண்டை நாடுகளில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் மூலம்தான் இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தது. இதுதான் வரலாறு” என்று பேசினார் மோகன் பகவத், இதே போல் அவர் நீண்டகாலமாக பேசிவருகிறார், இது ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் என்பது அனைவரும் அறிந்ததே.

    இதற்கு இப்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார், அவர் கூறும்போது, “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே மூதாதையர்தான் என்றால் முஸ்லிம்களை மட்டும் ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் தத்துப் பிள்ளைகள் போல் நடத்துகின்றனர்? இது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் விளக்கம் அளிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Also Read: மேட்ரிமோனியில் காதல் வலை.. 11 இளம்பெண்களிடம் 3 கோடி வசூல் வேட்டை நடத்திய காதல் மன்னன்

    மேலும் உ.பி.யில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் இது தொடர்பாக அவர் கூறும்போது, “அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் பிராமண சமுதாயத்துக்கு பாதுகாப்பு அளிப்போம். வரும் தேர்தலில் பிராமணர்கள் நிறைய பேரை சேர்த்துக் கொள்வோம். 2007 போலவே” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: