• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதுமட்டும் நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் - ஜெகத்ரட்சகன் ஆவேசம்

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் - ஜெகத்ரட்சகன் ஆவேசம்

ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன்

23 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைத்து, கறுப்பு-சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி.

  • Share this:
    2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என ஜெகத்ரட்சகன் எம்.பி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசுகையில், 23 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைத்து, கறுப்பு-சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன்.

    மேலும் படிக்க... திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை கிடப்பில் போட்ட அதிமுக அரசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    புதுச்சேரியில், தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. என்ன வருவாய் வருகிறது. வருவாய்க்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள். வேலை வாய்ப்பு இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன். இந்த மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.

    மேலும், புதுச்சேரியை ஒரு புதுமையான, வளமான, உலகத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக இருக்க மு.க.ஸ்டாலின் தலைமையில், அவருடைய ஆணையோடு திமுக தலைமையில் கூட்டணி அமையும். எந்த இயக்கங்களுடன் கூட்டணி, யாருடன் தேர்தலைச் சந்திப்பது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்.

    திமுகவினர் எனக்கு ஒரு உறுதியைத் தர வேண்டும். ஸ்டாலின் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான், நான் இங்கே வருவேன். இல்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என்று ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: