• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியம் உறுதி - ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியம் உறுதி - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாயும், மாநில அரசின் 2 ஆயிரம் ரூபாயும் வீடு தேடி வருவதால் அதை பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் ஆனால் அதற்காக பிரதிபலனை அவர்களுக்கு அளிக்காதீர்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சூசகமாக கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் திட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்புகள் "UNDAUNTED: SAVING THE IDEA OF INDIA" என்ற பெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதை சென்னையில் நேற்று வெளியிட்டு பேசிய ப.சிதம்பரம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாயும், மாநில அரசின் 2 ஆயிரம் ரூபாயும் வீடு தேடி வருவதால் அதை பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் ஆனால் அதற்காக பிரதிபலனை அவர்களுக்கு அளிக்காதீர்கள் என சூசகமாக கூறினார்.

கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமையும் எனக்கூறிய சிதம்பரம், கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு சாத்தியமாகியிருக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைந்தபட்ச வருவாய்த் திட்டத்தால் சோம்பேறி ஆகிவிட மாட்டார்கள் என்பதால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அதை செயல்படுத்துவது உறுதி என்றார்.

இந்தியாவுடன் காஷ்மீர் இணையும்போது நான்கு அம்சங்களை தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் தரப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசுகளும் செய்யத் தவறியதை சுட்டிக்காட்டிய சிதம்பரம், காஷ்மீருக்கு அதிக அதிகாரங்களை அளித்து மக்களின் மனங்களை வெல்வதே இதற்கு ஒரே நிரந்தர தீர்வு என்றார்,

”காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புகின்றனர், காஷ்மீருக்கென தனி தொழிற்சாலை சட்டம் இருக்கக்கூடாதா ? இதுபோல் வர்த்தக நிறுவனச் சட்டம், தனி வக்ப் சட்டம் இருக்கக்கூடாதா? அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கப்போவதில்லை”

”பணம் எப்படி செயல்படுகிறது என்பதை மாணவர்கள் அறியும் வகையில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பொருளாதாரத்தை கட்டாய பாடமாக்கவேண்டும் என்றார். பொருளாதார ஞானம் சிறிதளவு இருப்பவர்கள் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அனுமதித்திருக்க மாட்டார்கள்” என மத்திய அரசை சாடிய அவர், அதனால் நாட்டின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

Also Watch: 21 எம்.பி.க்கள் Vs 21 எம்.எல்.ஏ.க்கள்… அதிமுகவுக்கு எது முக்கியம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: