பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை: பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் எச்சரிக்கை

பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை: பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் எச்சரிக்கை

பொது முடக்கம்

  • Share this:
கொரோனா நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் மற்றும் தினமும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தால், மும்பை மற்றொரு பொது முடக்கத்தை சந்திக்கலாம் என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்படும் என அந்நகர மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள Byculla உயிரியல் பூங்காவின் சமூக வலைத்தள கணக்கை இன்றுதொடங்கி வைத்த மேயர் கிஷோரி பெட்னேகர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

மும்பையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது, இக்காலகட்டத்தில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் மும்பையில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.

“முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். கொரோனா பரவல் ஏற்பட்டு ஒரு வருடம் ஆனாலும் நாம் இதனை கடைப்பிடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் பொதுமக்கள் பலரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. பொது மக்களின் இந்த அஜாக்கிரதை காரணமாக மும்பையில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசிக்கும்” என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.

மும்பையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பயணிக்க பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதுவரை மும்பையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில் கடந்த வாரம் மும்பை பல்கலைக்கழகத்திற்கு மும்பை நகராட்சி கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கல்லூரிகள் திறப்பு குறித்து பிப்ரவரி 22 அன்று முடிவு எடுக்கப்படும் எனவும் மேலும் சில தளர்வுகளை வழங்குவது தொடர்பாக அன்று முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: