இந்தியாவை இந்து நாடாக பாஜக மாற்றி விடும்: சசிதரூர் எச்சரிக்கை

news18
Updated: July 12, 2018, 7:17 AM IST
இந்தியாவை இந்து நாடாக பாஜக மாற்றி விடும்: சசிதரூர் எச்சரிக்கை
சசிதரூர்
news18
Updated: July 12, 2018, 7:17 AM IST
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா 'இந்து பாகிஸ்தான்'-ஆக மாறிவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் எச்சரித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிதரூர்,  மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிதாக அரசியலமைப்பை உருவாக்க வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும் சசி தரூர் எச்சரித்தார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா, காங்கிரசின் பேராசை காரணமாகவே பாகிஸ்தான் என்ற நாடு உருவானது என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சமிதா பத்ரா வலியுறுத்தியுள்ளார். சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த சசிதரூர், நீண்ட நாளாக பாஜகவை விமர்சிக்காமலே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் பாஜக-வை பகிரங்கமாக விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...