முகப்பு /செய்தி /இந்தியா / பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.. அமித் ஷா அசத்தல் அறிவிப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி.. அமித் ஷா அசத்தல் அறிவிப்பு

அமித் ஷா

அமித் ஷா

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அமித் ஷா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tripura, India

திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.

திரிபுராவில் வரும் 16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமித்ஷா, சேபாஹிஜாலா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், திரிபுராவில் மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி மற்றும் திரிபுரா முதலமைச்சர் மானிக் சாஹா, மாநில முன்னேற்றத்திற்கு உழைப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.காங்கிரஸுடன் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்த போதே, அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்திப்பூரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா, பாஜக தொண்டர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

First published:

Tags: Amith shah, BJP, Elections, Tamil News, Tripura