பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும்: கேரள பாஜக தலைவர் பேச்சு

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும்: கேரள பாஜக தலைவர் பேச்சு

கும்மணம் ராஜசேகரன். பாஜக

நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தோம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால் விலை ரூ.60 தான் வரும். எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 என்று குறைக்கப்படும் என்றார் கும்மணம்.

 • Share this:
  பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.60க்குக் குறைப்போம் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் பேசியுள்ளார்.

  அதாவது தங்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து ரூ.60 ஆகக் குறைப்போம் என்கிறார் கும்மணம் ராஜசேகரன். இது ஜிஎஸ்டி கவுன்சிலுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

  இடது முன்னணி அரசை அவர் கேள்வி கேட்கும் போது ‘ஏன் பெட்ரோ, டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார். இது தேசிய விவகாரம், மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்றார் கும்மணம்.

  கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் எந்த நேரத்திலும் எரிபொருள் மீது ஜிஎஸ்டி விதிக்க முடியாது என்று கூறியதை கேள்வி கேட்கும் கும்மணம், “உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருக்கின்றன, ஆனால் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை எது தடுக்கிறது” என்றார்.

  நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தோம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால் விலை ரூ.60 தான் வரும். எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 என்று குறைக்கப்படும் என்றார் கும்மணம்.

  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டு விட்டது. டீசல் விலையும் உச்சம் தொட்டதால் லாரி உரிமையாளர்கள் சரக்குக் கட்டணத்தை அதிகரித்துள்ளனர், இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை மேலும் அதிகரித்து வருகிறது.

  பெட்ரோல், டீசல் விற்பனை தனியார்மயமாகும் என்பதால் அதை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாட்டார்கள் தனியாருக்கு அதிக விலையை ஏற்றி கொடுக்கத்தான் இந்த விலை உயர்வு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
  Published by:Muthukumar
  First published: