முகப்பு /செய்தி /இந்தியா / மஹாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

மஹாராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

மாவோயிஸ்ட் தாக்குதல்

மாவோயிஸ்ட் தாக்குதல்

சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வேன் வரும் போது வெடித்ததில், வேன் தூக்கிவீசப்பட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த இடமான கட்சிரோலியில், இன்று கமாண்டோ படை வீரர்கள் சென்ற வேனை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வேன் வரும் போது வெடித்ததில், வேன் தூக்கிவீசப்பட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பல வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடந்து அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Naxal Attack