எங்கள் நிறுவன உணவுப் பொருளில் மாட்டுக்கறி சேர்க்கிறோமா? - வைரல் வாட்ஸ்அப் வதந்தி குறித்து ஐடி ஃபுட்ஸ் நிறுவனர் விளக்கம்

ஐடி ஃபுட்ஸ்

எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் தவறானது என்று ஐடி ஃப்ரஸ் ஃபுட்ஸ் நிறுவனர் முஸ்தபா விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  கர்நாடகா மாநிலம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட உணவு நிறுவனம் ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ். 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் உணவுப் பொருள்கள் மைசூரு, மங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜாமுந்திரி, சென்னை, எர்ணாகுளம், கோயம்புத்தூர், கொச்சின் மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிறுவனம், இட்லி, தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்கிறது.

  அந்த நிறுவனத்தை நிறுவிய முஸ்தபா அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவருகிறார். இந்த நிலையில், அந்த நிறுனத்தின் உணவுப் பொருள் தயாரிப்பு குறித்து வாட்ஸ்அப் வைரலாக ஒரு செய்தி பரவியது. அந்த வாட்ஸ்அப் வதந்தியில், ‘உணவுப் பொருள்களின் அதிகரிப்பதற்காக அதில், மாட்டு எலும்புகள் மற்றும் கன்றுக்குட்டியின் வயிற்றில் இருக்கும் மாமிசம் சேர்க்கப்படுகிறது.

  அந்த நிறுவனத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வேலைக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களது உணவுப் பொருள்கள் முழுவதும் ஹலால் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் தீவிரமான ஷரியா சட்டத்தைக் கடைப்பிடித்து 35 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா, ‘தரமான சைவ உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி உணவுப் பொருள் தயாரிக்கப்படுகிறது.

  மேலும், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து உணவு தயாரிக்கப்படுகிறது. தற்போதைய காலத்தில் போலிச் செய்திகள் பரவுவதை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் மிக வேகமாக பரவுகின்றனர். தவறான செய்திகள் பரவி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எங்கள் நிறுவன உணவுப் பொருள்களுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி, கொரோனா தடுப்பூசிக்கு எதிரானதாக இருந்தாலும் அந்த வதந்திகள் நிறுத்தப்படவேண்டும். அது முக்கியமானது, அத்தியாவசியமானது’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: