ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சர் ஆகியோரை நிதி முறைகேடு வழக்கில் சிபிஐ கைது நேற்று கைது செய்துள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் தான் பதவி வகித்த 2012ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளார்.
இந்த கடன் பரிவர்த்தனை மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சர் மற்றும் உறவினர்கள் பெருமளவில் நிதி ஆதாயம் பெற்றது 2018ஆம் ஆண்டில் அம்பலமானது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2018 அக்டோபர் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார். தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அத்துடன் 2019ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நாட்டு நிலைமை சரியில்ல, பசங்கள வெளிநாட்டில் செட்டில் ஆக சொல்லிட்டேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு
இந்த வழக்கு விசாரணை சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சரை சிபிஐ நேற்றிரவு கைது செய்துள்ளது. டெல்லியில் விசாரணைக்கு ஆஜரான இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீபக் கோச்சார் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருக்கிறார். இருவரின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank fraud, CBI, ICICI Bank, Loan