முகப்பு /செய்தி /இந்தியா / பசுவின் வயிற்றில் இருந்து 77 கிலோ ஐஸ்கிரீம் கப்ஸ் மற்றும் ஸ்பூன்கள் அகற்றம்!

பசுவின் வயிற்றில் இருந்து 77 கிலோ ஐஸ்கிரீம் கப்ஸ் மற்றும் ஸ்பூன்கள் அகற்றம்!

ஐஸ்கிரீம் கப்ஸ்

ஐஸ்கிரீம் கப்ஸ்

நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • Last Updated :

அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை விட, பன்மடங்கு பாதிப்புகளை கால்நடைகளுக்கு கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியில் முடிவடைகிறது. அப்படி திறந்த வெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய இனங்களில் ஒன்று தான் தெருவில் சுற்றித்திரியும் மாடுகள். பிளாஸ்டிக் கழிவுகளை தின்றதால் எண்ணற்ற கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அந்த வகையில் சமீபத்தில், நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான அறிக்கையின்படி, குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட கழிவுகளை அகற்றியுள்ளனர். ஆனந்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில்,  மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

முதலில் நோய்வாய்ப்பட்ட பசுவை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அறுவை சிகிச்சை குழுவைச் சேர்ந்த மருத்துவர் பினேஷ் பரிக் கூறுகையில், பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் மக்கள் தங்கள் உணவை சாப்பிட்ட பிறகு சாலையோரங்களில் வீசும் குப்பைகள் தான் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், உணவு தேடி அலையும் மாடுகள், தவறுதலாக பிளாஸ்டிக்கை உட்கொள்வதை பொதுமக்கள் பார்த்தும் அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை.

ALSO READ |  விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா புகார்

மக்களின் இந்த தவறான பழக்கத்தால் கால்நடைகள் பிளாஸ்டிக் சாப்பிட்டு நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆனந்தில் உள்ள இந்த கால்நடை மருத்துவமனைக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் 3 முதல் 4 மாடுகள் சாலையோர குப்பைத் தொட்டிகளில் இருந்து பிளாஸ்டிக்கை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்ட நிலையில் இங்கு கொண்டுவரப்படுகின்றன.

இதனை தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டியளித்த காம்தேனு பல்கலைக்கழக, கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை மற்றும் கதிரியக்கத் துறையின் தலைவர் டாக்டர் பரீக் கூறுகையில், “ஒவ்வொரு முறையும், 10 கிலோவிலிருந்து 55-60 கிலோ வரை கழிவுகள் மாறுபடும். மக்கள் வழக்கமாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் கயிறுகளை அல்லது சாலையோரங்களில் வீசும் கழிவுகளை மாடுகள் தற்செயலாக தின்றுவிடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

ALSO READ |  சாதியை இழிவுபடுத்தினார்.. கன்னத்தில் அறைந்தார்.. நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு

மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் தெரு கால்நடைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கிய டாக்டர் பரிக், " மாடுகள் பிளாஸ்டிக்கை உட்கொண்ட பிறகு அவற்றில் அஜீரண பிரச்சனைகள் உருவாகின்றன. பிளாஸ்டிக்கை ஜீரணிக்க முடியாது என்பதால், பசுக்களின் ஜீரண சக்தி நாளடைவில் குறைந்து, அவை நோய்வாய்ப்படும். நாளடைவில் பிளாஸ்டிக் அவற்றின் ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்குகிறது, சில சமயங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் மாடுகள் இறக்க நேரிடுகின்றன" என்று அவர் கூறினார்.

First published:

Tags: Cow, Ice cream, Plastic Ban, Plastic pollution