ஹோம் /நியூஸ் /இந்தியா /

பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் - டிவி சேனல்களுக்கு அரசு அறிவுறுத்தல்

பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் - டிவி சேனல்களுக்கு அரசு அறிவுறுத்தல்

தனியார் சேனல்கள் பரபரப்பான, சர்ச்சைக்குரிய மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தனியார் சேனல்கள் பரபரப்பான, சர்ச்சைக்குரிய மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தனியார் சேனல்கள் பரபரப்பான, சர்ச்சைக்குரிய மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், The Cable Television Networks (Regulation) Act, 1995 சட்டத்தின் 20ஆவது பிரிவை அனைத்து தனியார் சேனல்களும் பின்பற்றி நடக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

  இது தொடர்பாக அமைச்சகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதலில்,சில தனியார் சேனல்கள் பரபரப்பு, சர்ச்சை மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சில ஊடகவியாளர்களும், ஊடகங்களும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தரும் தகவலை திரித்தும், தவறாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

  அதேபோல், அண்மையில் வடமேற்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சில சேனல்கள் பொறுப்பற்ற முறையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ கிளிப்புகளை வெளியிட்டு ஒரு சமூகத்தை குறிவைத்து மோதலையும் வன்முறையையும் உருவாக்கும் விதமாக செய்திகள் வெளியிடுகின்றன. இது ஏற்கதக்கது அல்ல. மேலும் டிவி செய்தி சேனல்களின் விவாதங்களில் அநாகரீகமான ஏற்றுக்கொள்ளாத வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதையும் சேனல்கள் தவிர்க்க வேண்டும்.

  டிவி சேனல்கள் தற்போது செயல்படும் நிலை குறித்து அரசு தீவிரமான கவலை கொண்டுள்ளது. எனவே, 1995 சட்ட விதிக்கு மாறாக எந்த செய்தியையும் தகவலையும் டிவி சேனல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கொள்கைக்கு கோட்சே, டூருக்கு காந்தியா - பாஜகவுக்கு சிவசேனா கடும் கண்டனம்

  இந்த வழிகாட்டுதலில் சில சேனல்கள் எவ்வாறு விதிமுறைகளை மீறியுள்ளன என்பதை மத்திய அரசு பெயர் குறிப்பிடாமல் உதாரணம் காட்டியுள்ளது. 'ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த செய்தி ஒளிபரப்பில் ஒரு தனியார் தொலைக்காட்சி, ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உண்மை அற்ற தகவல்களை பரப்பி வருகின்றன' என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  அதேபோல், டெல்லி கலவரம் குறித்த செய்தியில் ஒரு டிவி சேனல், 'ஒரு நபர் கையில் கத்தியுடன் அலையும் வீடியோவை பதிவிட்டு டெல்லி யார் அமைதிக்கு யார் எதிரி என செய்தி வெளியிட்டு அந்த காட்சியை திரும்ப திரும்ப காட்டியது. இது சமூகத்தில் தவறான மனநிலையை உருவாக்கி மத வன்முறையை தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தும்' என மத்திய அமைச்சகம் கண்டித்துள்ளது. அதேபோல், தரம்தாழ்ந்த விமர்சனங்கள், உணர்வுகளை தூண்டும் வகையிலான பேச்சுக்களை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: TV Channels