முகப்பு /செய்தி /இந்தியா / பெண்கள் குறித்து இழிவு.. வாசனை திரவிய விளம்பரத்தை ட்விட்டர், யூ டியூப்பில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

பெண்கள் குறித்து இழிவு.. வாசனை திரவிய விளம்பரத்தை ட்விட்டர், யூ டியூப்பில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு

சர்ச்சைக்குரிய விளம்பரம்

சர்ச்சைக்குரிய விளம்பரம்

பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை யூ டியூப் மற்றும் ட்விட்டரில் நீக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வாசனை திரவிய விளம்பரம் ஒன்று பெண்கள் குறித்து இழிவாகவும் பாலியல் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை ட்விட்டர், யூ டியூப் ஆகியவற்றில் இருந்து நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Layers Shots வாசனை திரவிய விளம்பரங்கள் அன்மையில் யூ டியூப் போன்ற ஊடகங்களில் வெளியானது. இந்த விளம்பரங்களில் பெண்கள் குறித்து மிகவும் இழிவாக சித்தரித்துள்ளதாகவும் பாலியன் வன்முறையை தூண்டும் விதமாக விளம்பரங்கள் உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த விளம்பரத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மகளீர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஷாட் நிறுவனத்தின் விளம்பரம் அச்சமுட்டூம் வகையில் உள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மையை மிக மோசமான வடிவில் காட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை கலாச்சாரத்தை தெளிவாக வளர்க்கிறார்கள்! நிறுவன உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எஃப்ஐஆர் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி I&B அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என தெர்வித்திருந்தார்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட் தடுப்பூசி - கோர்பேவாக்ஸ் பூஸ்டருக்கு அனுமதி

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை யூ டியூப் மற்றும் ட்விட்டரில் நீக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பின்னர்,  இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் நடவடிக்கையை தொடர்ந்து அவற்றை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.

தற்போது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ட்விட்டர் , யூ டியூப் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ.மெயிலில், “ வாசனை திரவியத்தின் விளம்பரங்கள் பெண்களின் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நலன்களுக்கு எதிராகவும் அவா்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது. மேலும், எண்ம ஊடகத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையிலும் அவை அமைந்துள்ளன.

மேலும் படிங்க: கூகுளை பார்த்துவிட்டு வந்து சந்தேகம் கேட்டால் ரூ.1000 தனிக் கட்டணம் - அசர வைக்கும் மருத்துவர்

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் விதி 3(1)(b)(ii) படி, பாலின அடிப்படையில்  துன்புறுத்துகிற வகையில் எந்த தகவலையும் ஹோஸ்ட் செய்யவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது. ஆனால், இந்த விளம்பரங்கள் இதனை மீறியுள்ளன. இந்த விளம்பரங்கள் பெண்கள் மீதான கூட்டு பாலியன் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.  எனவே, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

First published:

Tags: Advertisement, Deodorant