மத்திய அரசுக்கு எதிராகப் போராடவுள்ளேன்! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் போராட முடிவு செய்திருப்பதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா ஃபேசல் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 1:24 PM IST
மத்திய அரசுக்கு எதிராகப் போராடவுள்ளேன்! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
ஷா ஃபேசல்
Web Desk | news18
Updated: January 10, 2019, 1:24 PM IST
2010-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த காஷ்மீரைச் சேர்ந்த அதிகாரி ஷா ஃபேசல் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர், ‘காஷ்மீரில் நடைபெறும் தொடர் கொலைகள் மற்றும் நம்பகமான, அரசியல் ரீதியான நடவடிக்கைகள் எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்த்து போராட, ஐ.ஏ.எஸ் பொறுப்பிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளேன். காஷ்மீர் மக்களின் வாழ்வே முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


To protest the unabated killings in Kashmir and absence of any credible political initiative from Union Government, I have decided to resign from IAS.

மேலும் இவர், தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும் விதமாக ஷாவின் ராஜினாமா முடிவுக்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தேசபக்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் வெறுப்பரசியல் மேலோங்கி வருகிறது. காஷ்மீரில் தொடரும் கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவித அணுகுமுறையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Also see.... நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்?
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...