’ஐஏஎஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவன்’ - அரசு மருத்துவர் ஆட்டோ ஓட்டச் சென்ற அவலநிலை

கொரோனா தொற்றால் நாடே திணறி வரும் நிலையில், அதிகாரிகளின் நெருக்கடியை தாங்க முடியாமல் கர்நாடக அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’ஐஏஎஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவன்’ - அரசு மருத்துவர் ஆட்டோ ஓட்டச் சென்ற அவலநிலை
ஐஏஎஸ் அதிகாரிகளின் நெருக்கடியைத் தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டச் சென்ற அரசு மருத்துவர் ரவீந்திரநாத்.
  • News18 Tamil
  • Last Updated: September 7, 2020, 10:43 PM IST
  • Share this:
காக்கிச் சீருடையுடன் ஆட்டோ ஓட்டும் இவரது பெயர் ரவீந்திரநாத். 53 வயதான இவர் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் 24 ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். அதனை ஏற்க ரவீந்திரநாத் ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தி அதிகாரிகள் ரவீந்திரநாத்தை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளனர்.

தண்டனை முடிந்து பணிக்கு திரும்பியபோதும், அதிகாரிகள் ரவீந்திரநாத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து 24 ஆண்டுகளாக தான் செய்து வந்த மருத்துவர் பணியை ராஜினாமா செய்த ரவீந்திர நாத், ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டுநராக களமிறங்கி விட்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவன் என ஆட்டோவில் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் வாடிக்கையாளர்கள் கண்ணில்படுமாறு எழுதி வைத்துள்ளார்.


Also read: திமுக நடத்திய மாரத்தான் போட்டிக்கு ஆசிய சாதனையாக அங்கீகாரம்: திரட்டிய 23 லட்ச ரூபாய் கொரோனா நிதிக்கு வழங்க முடிவுAlso read: தனது மொபைல் போனை விற்று மது விருந்து கொடுத்ததால் ஆத்திரத்தில் நண்பரைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

தனியாக மருத்துவமனை தொடங்க வேண்டும்; எனினும் இதே மருத்துவர்களிடம் தான் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ள ரவீந்திரநாத், தொழில் தொடங்குமளவுக்கு போதுமான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார். தான் நாடிய 2 வங்கிகள் ஆட்டோ வாங்க கடன் வழங்க மறுத்து விட்டதாகவும், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஆட்டோ வாங்கியுள்ளதாகவும் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.ஆட்டோ ஓட்டும் மருத்துவர் ரவீந்திரநாத் குறித்த செய்திகள் வெளியான நிலையில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மீண்டும் பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading