பாலகோட் தாக்குதலில் பயன்படுத்திய ஸ்பைஸ் ரக குண்டுகளை வாங்க இஸ்ரேல் உடன் இந்தியா ஒப்பந்தம்!

”இந்த குண்டுகள் 60 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை உடையது”

news18
Updated: June 7, 2019, 4:22 PM IST
பாலகோட் தாக்குதலில் பயன்படுத்திய ஸ்பைஸ் ரக குண்டுகளை வாங்க இஸ்ரேல் உடன் இந்தியா ஒப்பந்தம்!
ஸ்பைஸ் ரக குண்டுகள்
news18
Updated: June 7, 2019, 4:22 PM IST
பாகிஸ்தானில் பாலகோட் தாக்குதலுக்கு பயன்படுத்தியதை போன்ற (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை இஸ்ரேலிடம் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய விமானப்படை கையெழுத்திட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் புகுந்த இந்திய விமானப்படை, பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், பாலகோட் தாக்குதலில் இந்திய விமானப்படை பயன்படுத்திய அதிநவீன ஸ்பைஸ் ரக குண்டுகளை பயன்படுத்தியிருந்தது.

தற்போது, இந்த குண்டுகளை அதிகளவில் வாங்க இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 300 கோடி ரூபாய் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் படி, அதிநவீன திறன் கொண்ட ஸ்பைஸ் குண்டுகள் அடுத்த 3 மாதங்களில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். அவசர கால அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

இந்த குண்டுகள் 60 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை உடையது. இந்த வெடிகுண்டுகளில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்கல் திறன் விமானத்தில் உள்ள கணினியால் கட்டுப்படுத்தக் கூடியது.

மேலும், SPICE 2000 விமானங்கள், போர் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கியது.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...