முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், உடல்களை மீட்பது உள்ளிட்ட மீட்பு பணிகளில் உதவிய தமிழக அரசு, உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 8ம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய கிராம மக்களுக்கு விமானப்படை சார்பில் நேற்று நன்றி தெரிவிக்கப்பட்டது.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை என மளிகை பொருட்களை வழங்கிய இந்திய விமானப்படையினர், அம்மக்களுக்ககு கைகூப்பி வணங்கி நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
IAF thanks the prompt and sustained assistance provided by the Office and Staff of @CMOTamilnadu, @collrnlg, Police officials and locals from Katteri village in the rescue and salvage operation after the unfortunate helicopter accident.
— Indian Air Force (@IAF_MCC) December 11, 2021
இந்நிலையில், இந்திய விமானப்படை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், துரதிஷ்டவசமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்பு நடவடிக்கையின்போது உடனடி மற்றும் நீடித்த உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்கள்: ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்த விமானப்படை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.