அபிநந்தன் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கு போலி - மத்திய அரசு

அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்

அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அபிநந்தன் பெயரில் இருக்கும் டுவிட்டர் கணக்கு போலியானது என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

  காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது வருகிறது. இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் 21 ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அபிநந்தனை கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விடுவித்தது.

  பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில், தன்னை மதித்து பார்க்க வந்த நிர்மலா சீதாராமனுக்கு அபிநந்தன் நன்றி தெரிவிக்கும் ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதேபோல் அபிநந்தன் பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு இந்திய அரசுக்கு எதிராக சர்ச்சைகளை ஏற்படுத்தும் பல பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் பிரதான கேள்வியே மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தான் என அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் இனி பாகிஸ்தானுக்கு சேவை செய்யப்போவது போன்ற பல பதிவுகள் போலி கணக்குகள் மூலம் பதிவிடப்பட்டு வருகிறது.  இதையடுத்து அந்த ட்விட்டர் கணக்குளை சரிபார்த்த மத்திய அரசு, அபிநந்தன் பெயரில் இருக்கும் கணக்கு போலியானது என விளக்கமளித்துள்ளது.
  Published by:Prabhu Venkat
  First published: