மீண்டும் ஸ்ரீநகர் படைத்தளத்துக்குத் திரும்பிய ஹீரோ அபிநந்தன்!

அபிநந்தன்

ஸ்ரீநகரில் உள்ள தனது பணியிடத்துக்கு விங் கமாண்டர் அபிநந்தன் சென்றாலும், 4 வார பணி விடுப்பு முடிந்த உடன் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் மீண்டும் அவர், விமானம் இயக்க அனுமதிக்கப்படுவார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாகிஸ்தான் பிடியிலிருந்து மார்ச் 1 -ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன், தனக்கு வழங்கப்பட்ட 4 வார விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படை தளத்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, அந்நாட்டின் போர் விமானங்களை விரட்டி அடித்து, தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன். இவர் அன்று பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். பின்னர், 2 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா திரும்பிய அபிநந்தனிடம், விசாரணை மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு 4 வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே, ஸ்ரீநகரில் தான் பணியாற்றும் விமானப்படை தளம் அபிநந்தன் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள தனது பணியிடத்துக்கு விங் கமாண்டர் அபிநந்தன் சென்றாலும், 4 வார பணி விடுப்பு முடிந்த உடன் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் மீண்டும் அவர், விமானம் இயக்க அனுமதிக்கப்படுவார் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Also See...

Published by:Mari S
First published: