Home /News /national /

அபிநந்தனிடம் என்ன மாதிரியான சோதனைகள் நடக்கும்?

அபிநந்தனிடம் என்ன மாதிரியான சோதனைகள் நடக்கும்?

அபிநந்தன்

அபிநந்தன்

  • News18
  • Last Updated :
    பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு நேற்று இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு உளவியல் பரிசோதனைகள் மற்றும் முழு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

    பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் அபிநந்தன் வர்தமான் நேற்று வாகா - அட்டாரி எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தார். பிற்பகல் வருவார், மாலை விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், இரவு 9 மணியளவிலேயே அவர் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

    இந்திய அதிகாரிகள் அவரை கைகுலுக்கி வரவேற்றனர். இதனை அடுத்து, அவர் உடனே அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் செஞ்சிலுவை சங்கத்திடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட உள்ளார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்படும்.



    ஜெனிவா ஒப்பந்தப்படி இது மிகவும் கட்டாயமான ஒன்று. பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் அவருக்கு மருந்து எதுவும் செலுத்தப்பட்டதா, உடல் மற்றும் மன ரீதியாக அவர் சித்தரவதைக்கு உள்ளானாரா? என்று செஞ்சிலுவை சங்கம் ஆராய்ந்து அறிக்கை தரும். இந்த அறிக்கை ஐ.நா அமைப்புக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    செஞ்சிலுவைச் சங்கத்தின் சோதனைக்குப் பிறகு அபிநந்தன் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படுவார். இதன் பின்னரும், சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு முழு உடல்பரிசோதனை நடத்தும். அதனை அடுத்து, அவருக்கு உளவியல் ரீதியிலான சோதனைகள் நடத்தப்படும்.

    ராணுவ உளவுப்பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொள்வார்கள். பாகிஸ்தானில் அபிநந்தன் தரையிறங்கியது எப்படி? அங்கு என்ன நடந்தது? அந்நாட்டு ராணுவத்தினர் எப்படி நடத்தினார்கள் என்று அங்கு நடந்த நிகழ்வு அனைத்தையும் உளவுப்பிரிவினர் விசாரணை நடத்தி பெற்றுக்கொள்வார்கள்.



    அபிநந்தனுக்கே தெரியாமல் அவரது உடலில் உளவுக்கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா? என்ற சோதனையும் நடக்கும். இந்த அனைத்து சோதனைகளுக்குப் பிறகு உளவுத்துறை ஒரு அறிக்கை தயார் செய்து அது பாதுகாப்பு துறையின் பார்வைக்கு அனுப்பப்படும்.

    பாகிஸ்தான் அவரிடம் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறி நடந்து கொண்டது விசாரணையில் தெரியவருமானால், ஐ.நா.விடம் இந்தியா புகார் அளிக்கும்.
    Published by:Sankar
    First published:

    Tags: India Strikes Back

    அடுத்த செய்தி