பைலட் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது...பாலகோட் வீரர்களுக்கும் கவுரவம் அளிக்க முடிவு!

வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களுக்கு ‘வாயு சேனா பதக்கம்’ வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Web Desk | news18
Updated: August 8, 2019, 12:03 PM IST
பைலட் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது...பாலகோட் வீரர்களுக்கும் கவுரவம் அளிக்க முடிவு!
அபிநந்தன்
Web Desk | news18
Updated: August 8, 2019, 12:03 PM IST
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதும் பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானிகள் அனைவரையும் வீரதீர பதக்கங்கள் வழங்கி கவுரவிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ அபிநந்தன் வர்த்தமானுக்கு இந்த ஆண்டுக்கான வீர் சக்ரா விருது வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ராணுவ கவுரவ விருதான வீர் சக்ரா அபிநந்தனுக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அபிநந்தனுடன் பாகிஸ்தானுக்குப் பதிலடி அளிக்க பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த கூடாரங்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களுக்கு ‘வாயு சேனா பதக்கம்’ வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.


புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய பதில் தாக்குதலின் போது பிணையாகப் பிடிக்கப்பட்டவர் அபிநந்தன். பாகிஸ்தானிடம் சிக்கியபோதும் தைரியத்துடன் செயல்பட்ட அபிநந்தனை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

தற்போது சில காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று வரும் அபிநந்தன், விமானப்படை விமானிக்கான ஆரோக்கிய தகுதிகளுடன் இருக்கிறாரா என்பதற்கான சோதனை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ மையத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் சூழலில் மீண்டும் தனது விமானி பணியை அபிநந்தன் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...