மீண்டும் விமானப்படை விமானியாகவுள்ள அபிநந்தன்!

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 11:24 PM IST
மீண்டும் விமானப்படை விமானியாகவுள்ள அபிநந்தன்!
அபிநந்தன்
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 11:24 PM IST
காயங்களால் சிகிச்சைப் பெற்று வந்த  இந்தியாவின் பிரபல விங் காமண்டர் அபிநந்தன், காயங்கள் அனைத்தும் குணமாகி, விமானப்படை விமானிக்கான முழு உடல் தகுதிகளையும் பெற்றுள்ளார் என விமானப்படை மருத்துவக்குழு அறிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய பதில் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டவர் அபிநந்தன். பாகிஸ்தானிடம் சிக்கியபோதும் தைரியத்துடன் செயல்பட்டதால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரின் பாராட்டுகளை பெற்றவர்.

அவர் மீட்க பட்ட நிலையில், சில காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அபிநந்தன் விமானப்படை விமானிக்கான முழு ஆரோக்கிய தகுதிகளையும் பெற்றுள்ளார் என விமானப்படை மருத்துவ மையம் அறிவித்துள்ளது.


இனி வரும் காலங்களில், மீண்டும் தனது விமானி பணியை அபிநந்தன் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக ராணுவ கவுரவ விருதான வீர் சக்ரா அபிநந்தனுக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனோடு,  ‘வாயு சேனா பதக்கம்’ வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

Also Watch: ஜெயலலிதாவை மனதில் வைத்து பெண்ணாக நடித்தேன் - நடிகர் ஆனந்தராஜ்

Loading...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...