ஜம்மு-காஷ்மீரில் ராணுவ விமானம் விபத்து; 2 விமானிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், ஃபைசிபாத், சைகோட் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ விமானம் விபத்து; 2 விமானிகள் உயிரிழப்பு!
விமான விபத்து
  • News18
  • Last Updated: February 27, 2019, 4:23 PM IST
  • Share this:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக விபத்துக்களாகியுள்ளது.

விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சுசித்ரா-விடம் கேட்டபோது “ராணுவ விமானங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டு வந்த தொழில்நுட்ப காரணங்களால் விபத்துக்குள்ளாகிறது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு, லே ஆகிய மூன்று பகுதிகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளுக்கு எந்த விமானமும் செல்லக் கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு எந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. டெல்லியிலிருந்து ஜம்மு, ஸ்ரீநகர், லே ஆகிய விமான நிலையங்களுக்குச் சென்றுகொண்டிருந்த விமானங்கள் தற்காலிகமாக ஜெய்ப்பூர் பகுதிக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் இந்த வழித்தடங்களில் விமானங்கள் பயணம் செய்ய அனுமதிக்க வாய்ப்புள்ளது” என்றும் கூறினார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் சூழும் அபாயம் உள்ளது. இந்திய விமானத்துக்கு ஏற்பட்ட இந்த விபத்தைப் பாகிஸ்தான் விமானப் படை சுட்டுத்தள்ளியாக அங்குள்ள ஊடகங்கள் செய்தியாக்கி வருகின்றன.பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், ஃபைசிபாத், சைகோட் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

மேலும் பார்க்க: 
First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்