Home /News /national /

நந்தி மலையில் சிக்கிக்கொண்ட நபர்: ஹெலிகாப்டரை அனுப்பி மீட்ட இந்திய விமானப் படை

நந்தி மலையில் சிக்கிக்கொண்ட நபர்: ஹெலிகாப்டரை அனுப்பி மீட்ட இந்திய விமானப் படை

இளைஞர் மீட்பு

இளைஞர் மீட்பு

Nandi Hills: மலையேற்றத்திற்காக பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்திமலைக்கு அவர் தனியாக சென்றுள்ளார்.  அப்போது, 300 அடி பள்ளத்தில்  நிஷாங்க் விழுந்துள்ளார். பின்னர் தனது செல்போன் மூலம் போலீஸை அழைத்து தான் மலையில் சிக்கிக்கொண்ட தகவலை கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நந்தி மலையில் மலையேற்றத்திற்காக சென்ற இளைஞர் ஒருவர் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

    டெல்லியைச் சேர்ந்த நிஷாங்க் கவுல் என்னும் இளைஞர் பெங்களூருவில் தங்கி கல்வி பயின்று வருகிறார்.  18 வயதாகும் நிஷாங்க் PES பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வருகின்றார். இந்நிலையில், மலையேற்றத்திற்காக பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்திமலைக்கு அவர் தனியாக சென்றுள்ளார்.

    அப்போது, 300 அடி பள்ளத்தில்  நிஷாங்க் விழுந்துள்ளார். பின்னர் தனது செல்போன் மூலம் போலீஸை அழைத்து தான் மலையில் சிக்கிக்கொண்ட தகவலை கூறியுள்ளார். இதனிடையே,  நந்தி மலையில் சிக்கிக்கொண்ட தனது சகோதரர் நிஷாங்கை மீட்க உதவுமாறுஅவரது சகோதரி சிம்ரன் கவுல் தேசிய பேரிடர் மீட்பு படை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை டேக் செய்திருந்தார்.



    சிக்கபள்ளாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.மிதுன்குமார், கூடுதல் துணை ஆணையர் அமரீஷ் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழுவினர் நிஷாங்க் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாலும்  நிலப்பரப்பு கடினமாக இருந்ததால் அந்த இடத்தை அடைய முடியவில்லை.

    இதையும் படிங்க: முதல்வர் முதல் பிரதமர் வரை: தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் மோடி


     

    அதிகாரிகள் உடனடியாக யெலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். இதையடுத்து விமானப் படையின் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டது. கயிறு மூலம் நிஷாங்க் பத்திரமாக மீட்கப்பட்டார். காயமடைந்திருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் அத்துமீறி நுழைந்தது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் இதே போல கேரளாவில் மலை முகட்டில் சிக்கித் தவித்த இளைஞர் ஒருவர் 2 நாளுக்கு பின் ராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Helicopter, IAF, Karnataka

    அடுத்த செய்தி