முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்!

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்!

 வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் மீட்பு

தகவல் கிடைத்த அரை மணி நேரத்தில், வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  • Last Updated :

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் 4 பேரை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.

காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தாவி நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அங்கிருந்த மீனவர்கள் 4 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து உடனடியாக இந்திய விமானப்படையினர் அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்தனர். அதற்குள் 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அங்கிருந்த 2 தொழிலாளர்கள், அருகில் இருந்த திட்டு மீது ஏறி தப்பினர்

ஆற்றின் குறுக்கே இருந்த திட்டின் மீது 2 மீனவர்கள் அமர்ந்திருப்பதை கண்ட விமானப்படை, ஹெலிகாப்டரில் இருந்து மீட்பு வீரர் ஒருவரை இறக்கியது. அவர் அந்த 2 பேரின் அருகே சென்று, அவர்கள் உடலில் ஹெலிகாப்டரோடு இணைக்கப்பட்டிருந்த கயிறுகளை கட்டினார். இதையடுத்து 2 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்

விமானப்படை வீரர்களின் துரித நடவடிக்கையால் மீனவர்கள் 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, ஜம்மு பகுதிக்கான விமானப்படை அதிகாரி சந்தீப் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 செய்திக்குழுமத்துக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தகவல் கிடைத்த அரை மணி நேரத்தில், வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க...கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய குழந்தையை மீட்ட போலீஸ் எஸ்.ஐ

top videos

    First published:

    Tags: Fisherman, Flood, IAF, Kashmir