13 பேருடன் மாயமான AN 32 ரக விமானம்... தேடும் பணியில் இணைந்த இஸ்ரோ

கடந்த 2009-ம் ஆண்டில் மேச்சுக்காவில் இருந்து 6 ராணுவ வீரர்களுடன் புறப்பட்ட AN தர்ட்டி டூ விமானம், இதே மேற்கு சயாங் மாவட்டத்தில் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

13 பேருடன் மாயமான AN 32 ரக விமானம்... தேடும் பணியில் இணைந்த இஸ்ரோ
AN 32 ரக விமானம் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 4, 2019, 3:32 PM IST
  • Share this:
அசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படையின் AN - 32 ரக விமானம், சீன எல்லை அருகே அருணாச்சல பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதியில் காணாமல் போன நிலையில், தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விமானப்படையின் சரக்கு விமானமான ஏஎன்- 32 ரக விமானம், அசாம் மாநிலம் ஜோர்ஹாத்தில் இருந்து 8 விமானப் படை ஊழியர்கள் மற்றும் 5 பயணிகளுடன் நேற்று பகல் 12 . 25 மணிக்கு புறப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேன்சுக்கா என்கின்ற ராணுவ தளத்துக்கு அந்த சரக்கு விமானம் புறப்பட்டது.  ஜோர்ஹாத்தில் இருந்து மேன்சுக்காவுக்கு பயண நேரம் 50 நிமிடங்கள் என்ற நிலையில் புறப்பட்ட 35 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மேன்சுக்கா அருகில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் காணாமல் போயிருக்கலாம் என கருதப்படுகிறது.


அதில் இருந்த 13 பேரின் நிலை என்னாயிற்று எனத் தெரியவி்ல்லை. காணாமல் போன விமானத்தை விமானப் படையின் சுகோய் 30 மற்றும் சி-130 ஹெர்குலிஸ் ரக விமானங்கள் மூலம் தேடிவருவதாகவும், தரைப்பகுதியில் இந்திய ராணுவமும், இந்தோ - திபெத் எல்லைப் பகுதி போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விமானப்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை துணைத் தளபதி ராகேஷ் சிங் பதவுரியாவிடம் கேட்டறிந்ததாகவும் விமானத்தில் இருந்தவர்களின் பாதுகாப்பு வேண்டி பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.சீனாவின் எல்லை அருகே அமைந்துள்ள மேன்சுக்கா விமான ஓடுபாதை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் மிக சிரமமானதாகும்.

மோசமான வானிலையும் சேர்ந்து கொள்வதால் விமானப் பயணத்திற்கு மிக அபாயகரமான பகுதியாக மேன்சுக்கா விளங்குகிறது.

காணாமல் போன ரஷ்ய தயாரிப்பான ஏஎன் ரக 32 விமானம், 40 ஆண்டுகளாக இந்திய பாதுகாப்புப் படையில் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன்பு இருமுறை விபத்தில் சிக்கியுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் மேச்சுக்காவில் இருந்து 6 ராணுவ வீரர்களுடன் புறப்பட்ட AN தர்ட்டி டூ விமானம், இதே மேற்கு சயாங் மாவட்டத்தில் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த 2016 ஜூலையில் இதே ஏஎன்-32 விமானம் சென்னையில் இருந்து அந்தமான செல்லும் வழியில் 22 பயணிகளுடன் காணாமல் போனது.

இந்தியாவில் அதுவரை இல்லாத மிகப் பெரிய தேடுதல் பணி நடந்தும் விமானத்தை கண்டறியமுடியவில்லை.

2009-ல் விபத்து நிகழ்ந்த அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சயாங் மாவட்டத்தில் உள்ள டேட்டோ பகுதியில் தேடுதல் ஹெலிகாப்டர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

காதலியை திருமணம் செய்து வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வெற்றியும் பெற்ற இளைஞர்!

First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...