மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சம் அடைந்துள்ளது. அங்கு சிவசேனா-தேசியவாத
காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக சிவசேனாவின் முன்னணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் பாஜக ஆளும் மாநிலமான கவுஹாத்தியில் தனி சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கையை அம்மாநில துணை சபாநாயகர் மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. போர்க்கொடி தூக்கியுள்ள 38 எம்எல்ஏக்களும் சிவசேனா கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இது போன்ற பரபரப்பான சூழலில் சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நாளை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. சிவசேனா கட்சியின் முன்னணி முகமான இவர் அதிருப்தி எம்எல்ஏக்களை எதிர்த்து தொடர் குரல் எழுப்பி வருகிறார். இவர்களை சட்ட ரீதியாகவும், களத்திலும் சரி எதிர்த்து போராட தயார் என தனது சிவசேனா தொண்டர்கள் முன் பேசினார். இந்நிலையில், அவருக்கு நெருக்கடி ஏற்படும் விதமாக மலாக்கத்துறை நாளை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க:
600க்கு 592 மதிப்பெண் வாங்கிய ஆட்டோ ஓட்டுநரின் மகன் - சக பயணியின் செயலால் குவியும் பாராட்டு
இதற்கு சஞ்சய் ராவத் காட்டமான எதிர்வினை ஆற்றியுள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பதிவில், 'அமலாக்கத்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தற்போது தான் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் முக்கிய மாற்றங்கள் நிலவி வருகிறது. நாங்கள் பால் சாஹேப் தாக்ரேவின் சிவ சைனிக்குகள். இது எங்களுக்கு எதிராக பின்னப்பட்ட சதி.
எனது தலையை கொய்தாலும் நான் கவுஹாத்தி வழியை தேர்வு செய்ய மாட்டேன் என மராத்தியில்' ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவில் மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்சையும் டேக் செய்துள்ளார். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் பலரும் ஏற்கனவே அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி தற்போது உத்தவ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தன்னை இது போன்ற நெருக்கடி நடவடிக்கைகள் மூலம் வளைத்து போட முடியாது என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.