என்னைப் பலிகடா ஆக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடியில் 9 துப்பாக்கிகளுடன் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அபாயகரமாக இருப்பதாக நீதிபதியே சொல்லியிருக்கிறார்.

Web Desk | news18
Updated: March 22, 2019, 7:36 PM IST
என்னைப் பலிகடா ஆக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தர்ராஜன் (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: March 22, 2019, 7:36 PM IST
தூத்துக்குடியில் பலமான வேட்பாளராகப் போட்டியிடுவதால் வெற்றி பெறுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.

மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களுக்குச் சேவை செய்வதற்குக் காரணமாக இருக்கும். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தூத்துக்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு உள்ளேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் பா.ஜ.க.விற்கு நேரடியாகத் தொடர்பு கிடையாது. விமர்சனங்கள் எங்கள் மீது வேண்டுமென்றே வைத்து உள்ளனர். பொதுமக்களின் கருத்துகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேசவில்லை.

மத்தியில் மீண்டும் மோடி தான் ஆட்சிக்கு வர போகிறார். மாநிலத்தில் கூட்டணிக் கட்சி தான் ஆட்சியில் இருக்கும். தூத்துக்குடி மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை விரைவாகச் செய்ய முடியும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் எண்ணமே எங்கள் எண்ணம். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றுக்கு ஸ்டாலின் தான் கையெழுத்துப் போட்டார். ஆனால் பா.ஜ.க. எதிரானது போல் பேசுகின்றனர்.
Loading...
பலமான தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க. என்னை தேர்வு செய்துள்ளது. என்னைப் பலிகடா ஆக்கவில்லை. பலமான தலைவராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன். ஆனால் பலவீனமான தலைவர் போல் கருதக்கூடாது.

காங்கிரஸ் கட்சியில் சீட்டிற்காகப் போட்டி நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வந்ததும் பிரச்சனைகள் மேலும் அதிகமாகும்.

மத்திய-மாநில அரசுகள் இணைந்து மக்களுக்குப் பல திட்டங்களைத் தந்து உள்ளது. திமுக-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அப்படி எதுவும் செய்யப்படவில்லை.

எதிரான கருத்துக்களைச் சொன்னாலும் யாரையும் எதிரியாகப் பார்க்க மாட்டோம். எல்லா தேர்தலிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் சவால் தான். பலத்தின் மீது நம்பிக்கையை வைத்து போட்டியிடுகிறேன்.

அத்வானியை பா.ஜ.க. தொலைத்துவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார். திமுக தான் வாரிசுகளுக்குத் தொகுதிகளைத் தந்து தொண்டர்களைத் தொலைத்துவிட்டது. அத்வானிக்குக் கட்சி மரியாதை தருகிறது. 90 வயது ஆனதால் கட்சி முடிவு செய்து இருக்கலாம். இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் பார்க்க: தேர்தல் 40/40: தூத்துக்குடி தொகுதி ஒரு சிறப்பு பார்வை
First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...